"தொப்பை பெருசா இருக்கா உங்களுக்கு.? அப்ப இந்த நாட்டுல நீங்க தான் ஹீரோ".! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வினோதமான வணக்கங்கள் இருக்கின்றன. பொதுவாகவே பெண்கள் தட்டையான வயிறு கொண்ட ஃபிட்டான ஆண்களை தான் விரும்புவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில்  வித்தியாசமான நடைமுறை ஒன்று புழக்கத்தில் இருக்கிறது.

இங்கு இருக்கக்கூடிய பழங்குடி மக்களிடையே வித்தியாசமான விழா ஒன்று நடத்தப்படுகிறது. அந்த விழாவின் வெற்றியாளரை அங்குள்ள பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு திருமணம் செய்கிறார்கள். இது உலகில் பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
 

இந்த நாட்டில் உள்ள போடி என்ற பழங்குடி மக்களிடையே தான் இந்த வினோதமான போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில்  கலந்து கொள்ளும் ஆண்கள் தங்களின் பெரிய தொப்பையுடன் கலந்து கொள்ள வேண்டும். யாருக்கு  பெரிய தொப்பை இருக்கிறதோ அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

அந்த வெற்றியாளரை மணந்து கொள்ள  இந்த பழங்குடி இனத்தைச் சார்ந்த பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்பார்களாம். இதற்காகவே இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஆண்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆறு மாதங்களுக்கு தங்கள் தொப்பையை வளர்த்துக் கொள்ள தீவிரமாக பயிற்சி  செய்வார்களாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

have a big belly dont worry go to this nation and get marry


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->