ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபல நடிகை.! வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ..! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய மதத்தின் சட்டங்களை மிகக் கடுமையாக பின்பற்றி வரும் ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அந்நாட்டின் தெஹ்ரான் பகுதியில், ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கடந்த மாதம் 17-ம் தேதி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்தார். 

இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்தில் பெண்கள் ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருவைதால், போராட்டக்காரர்களை ஒடுப்பதற்கு ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அந்த நாட்டில் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டது மட்டுமில்லாமல் மக்கள் கூட்டமாக கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஈரான் நாட்டில் பெண்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு உலகளவில் பல பிரபலங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஈரான் நடிகை எல்னாஸ் நோரூசி 'ஆடை அவிழ்ப்பு' வீடியோ மூலம் தனது ஆதரவை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து எல்னாஸ் நோரூசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்ததாவது, 

"பெண்கள் இந்த உலகில் எங்கிருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் அவள் விரும்பியதை எப்போதும், எங்கு வேண்டுமானாலும் அணிய உரிமை வேண்டும். எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் அவளை விமர்சிக்கவோ, தீர்மானிக்கவோ அல்லது வேறுவிதமாக ஆடை அணியச் சொல்லவோ உரிமை இல்லை. 

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்றால் முடிவெடுக்கும் அதிகாரம் என்பதே. ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் உடலைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். நான் இங்கு நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை, சுதந்திரத்தை ஊக்குவிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

இந்தப் பதிவுடன் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார். இந்த வெடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் "இதுவும் ஒரு துணிவுமிக்க போராட்ட வடிவம்" என்று வரவேற்றுள்ளனர். 

மேலும், ஈரானை சேர்ந்த எல்னாஸ் நோரூசி 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அளவில் மாடலாக இருந்து வருகிறார். கதக் உள்ளிட்ட நடனங்களை இந்தியாவில் பயின்றிருக்கிறார். 2018-ஆம் ஆண்டு நெட்பிளக்ஸில் வெளியான 'சாக்ரெட் கேம்'  என்ற தொடரிலும் எல்னாஸ் நோரூசி நடித்து உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hijap strike actor elnaaz norouzi support


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->