விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்: இலங்கை ராணுவ தளபதிகள் உற்பட 04 பேருக்கு பொருளாதார தடை வித்துள்ள இங்கிலாந்து..!
Human rights abuses in the war against the LTTE UK sanctions four Sri Lankan military commanders
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதிகள் உற்பட 04 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய போரில் மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இலங்கை ஆயுதப்படை முன்னாள் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணகொட, முன்னாள் இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணை தலைவராக செயல்பட்டு பின்னர் இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு இலங்கை பாராளுமன்றத்தில் துணை அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

போரின் போது சட்டத்திற்கு புறம்பாக கொலை, துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பாக 04 பேர் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
அத்துடன், இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
-wjw2r.png)
இலங்கையில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 2009- ஆம் ஆண்டு மே 18- ஆம் தேதி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.
சுமார் 30 வருட நடைபெற்ற போரில் 01 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போய்யுள்ளதாக இலங்கை அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Human rights abuses in the war against the LTTE UK sanctions four Sri Lankan military commanders