பிரிட்டன் : நூறு நிறுவனங்களில் நான்கு நாட்களாக பணி நேரம் குறைப்பு.!  - Seithipunal
Seithipunal


உலகில் உள்ள பல நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற கொள்கைக்கு மாறிவருகின்றன. அதன் படி, பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நாட்களை நான்கு நாட்களாக மாற்றியுள்ளன. 

இந்த மாற்றத்தால், பணியை தவிர்த்து மற்ற நாட்களில் பணி நேரம் நீட்டிக்கப்படாது என்றும் சம்பளம் குறைப்பு நடவடிக்கையும் கிடையாது என்றும் அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த பணி நேர குறைப்பால் 100 நிறுவனங்களில் பணியாற்றும் இரண்டு ஆயிரத்து 600 பணியாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நான்கு நாட்கள் வேலை என்ற மாற்றத்தில் இணைந்திருக்கும் அவின் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதம் ரோஸ் தெரிவித்ததாவது, "நிறுவனத்தின் வரலாற்றில் நான் பார்த்த மிகவும் மாற்றத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும்" என்று நெகிழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hundrad companies working time four days reduction in brittan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->