பாக்முட்டில் கடும் தாக்குதல்: கடந்த 24 மணி நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட் பகுதியில் இரு தரப்பினருக்குமிடையே கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாக்மூட் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் குறித்து உக்ரைனிய இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்பொழுது, பாக்மூட் பகுதியில் 221 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இ தனிடையே ரஷ்யா இராணுவ அமைச்சகமும் பாக்முட் பகுதியில் 210 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் டோட்ன்ஸ்க் நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருவது தடுக்கப்பட்டு வருவதாகவும், பாக்முட் பகுதியில் ரஷ்ய வீரர்களின் யுத்திகளை முறியடிக்கப்பட்டு வருவதாகவும், உக்ரைன் ராணுவ பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, கடந்த ஆறு மாதங்களாக ரஷ்ய தாக்குதலின் மையமாக இருக்கும் பாக்முட் நகரத்தை உக்ரைன் படைகள் கடுமையாக போராடி பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hundreds of troops killed in Bakhmut ukraine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->