கியூபாவை தாக்கிய இயன் புயல்.! இருளில் மூழ்கிய 1.10 கோடி மக்கள்.!
Hurricane Ian hits Cuba
அட்லாண்டிக் கடலில் மையம் கொண்ட இயன் புயல் செவ்வாய்க்கிழமை கியூபாவின் மேற்கு பகுதிகளை தாக்கியதில், பெரும்பாலான இடங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் கரையை ஒட்டி அமைந்துள்ள மீனவ கிராமங்கள் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டன.
மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தும், நாட்டின் முக்கிய புகையிலை பண்ணைகள், மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையான சேதமடைந்தன. இந்த புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புயலால் நாட்டின் முக்கிய மின்உற்பத்தி நிலையங்கள் கடும் சேதம் அடைந்ததால், மின்உற்பத்தி மற்றும் பகிர்மானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் 1.10 கோடி மக்கள் இருளில் தவித்து வருகின்றன.
இதையடுத்து மின் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் புயல் காரணமாக ஒரு சில இடங்களில் 30 செ.மீ வரை மழை செய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.