மனைவியைக் கொன்று மூளையைத் தின்ற கணவன்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் கணவன் தனது மனைவியை கொன்று மூளையைத் தின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் ஆல்வாரோ (வயது 32). இவரது மனைவி மரியா மான்செராட் (வயது 39). இந்த ஜோடி கடந்த ஒரு வருடத்திற்கு முன் தான் திருமணம் செய்து கொண்டனர். இதில் மனைவி மரியாவுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் 5 மகள்கள் உள்ளனர். இதில் கணவன் அல்வாரோ சைத்தான் வழிபாடு செய்யும் குழுவை சேர்ந்தவர் என்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அல்வாரோ தனது மனைவியை கடந்த ஜூன் 29ஆம் தேதி கத்தி, உளி மற்றும் சுத்தியலால் கொலை செய்துள்ளார். அதன்பின்னர் மனைவியின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு வீட்டின் பின்புறம் உள்ள பள்ளத்தாக்கில் வீசியுள்ளார். அதில் சில பாகங்களை மட்டும் வீட்டில் வைத்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் மேற்கண்ட விசாரணையின் போது சைத்தானின் வேண்டுகோளுக்கு இணங்க தனது மனைவியை கொடூரமாக கொலை செய்ததாக கூறியுள்ளார். மேலும் மனைவியின் மூளையைத் தின்று மண்டை ஓட்டை எரித்து சாம்பலாக்கியதாகவும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband killed wife ate brain in Mexico


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->