இயன் புயலால் புளோரிடா மாகாணம் முழுவதும் மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்துள்ளது - அதிபர் ஜோ பைடன் - Seithipunal
Seithipunal


அட்லாண்டிக் கடலில் உருவான இயன் புயல் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை தாக்கியதில் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மணிக்கு 150 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதில் பாலங்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் ப்ளோரிடா மாகாணம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், 7000 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா மாகாணங்களிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மற்றும் 4000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இயன் புயலால் புளோரிடா மாகாணம் முழுவதும் மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என்றும், புயலில் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ian hurricane ravages Florida province


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->