பணய கைதிகளை கண்டுபிடித்து கொடுத்தால் தலா ரூ. 42 கோடி சன்மானம்!...இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!
If you find the hostages and give them rupees 42 crore prize israel prime minister announced
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை தாக்கி வந்தனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான், காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதில், 117 பணய கைதிகளை இஸ்ரேல் உயிருடன் மீட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்த நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், காசா முனையில் பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சன்மானம் தரப்படும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
English Summary
If you find the hostages and give them rupees 42 crore prize israel prime minister announced