அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது அதிகரிப்பு!...ஓய்வூதியம் வழங்குவதை தடுக்க புதிய யுக்தி! - Seithipunal
Seithipunal


கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் மக்கள் தொகை சரிந்து வரும் அதே நேரத்தில், அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு சீனாவில் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்தும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஆண்களுக்கு ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 63 ஆகவும், பெண்களுக்கு 55-ல் இருந்து 58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு ஓய்வு பெறும் வயது 50-ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை வரும் 2025 -ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்றும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ ஓய்வூதிய வயதைக் கடந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நலன்களை உறுதி செய்தல்,  முதியோர் காப்பீட்டு ஊக்குவிப்பு செயல்முறைகளை செம்மைப்படுத்துதல், முதியோர் பராமரிப்பு மற்றும் குழந்தைப் பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட  நடவடிக்கைகளையும் மேற்கொள்ள 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் 11வது அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Increase in retirement age of government employees New tactic to block pensions


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->