ரஷ்யா படைகள் உக்ரைனில் இருந்து வெளியேற ஐ.நா வில் தீர்மானம் - வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகல்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர் தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் இருதரப்புகளிலும் ஏராளமானோர்  உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. 

அதுமட்டுமல்லாமல், உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இதற்கிடையே இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. 

மேலும், ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், இன்று ஐநா சபையில் உக்ரைன் நாட்டில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஐ.நா. சபையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்துள்ளன. 

மேலும், ஏழு நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. அத்துடன் இந்தியா மற்றும் சீனா உள்பட 32 நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறின. இருந்தாலும், 141 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india absatain from UN vote demanding to russia withdraw in ukraine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->