இலங்கையை வசப்படுத்த இந்தியாவுக்கு போட்டியே ஐக்கிய அரபு நாடுகள் தான்..யாருக்கு கிடைக்கும்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு அருகில் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு நாடு தான் இலங்கை. அங்கு கனிம வளங்கள் அதிகப்படியாக உள்ளதாகத் தெரிகிறது. அதை கையகப்படுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக இலங்கையில் பெருமளவில் உள்ள கிராபைட் எனப்படும் காரீய சுரங்கங்களை இந்தியா கையகப்படுத்த விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இந்திய அரசாங்கம் இலங்கையுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாகவும், மேலும் இது தொடர்பாக தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொருபுறம் இந்தியாவைப் போலவே ஐக்கிய அரபு நாடுகளும் இலங்கையின் முக்கிய கனிம வளங்களை பெறுவதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கு கிராபைட் மிகவும் முக்கியமான ஒரு உலோகமாக இருக்கிறது. இது பேட்டரிகள் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கிராபைட் வளங்களை இந்தியா கையகப்படுத்தினால் , அது பொருளாதார ரீதியாக இலங்கைக்கும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், கிராபைட் சுரங்கங்களை கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் மட்டும் நடந்து வருகின்றன. மேலும் இந்தியா மற்றும் இலங்கை இருதரப்பிலும் இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India andu United Arab Emirates competition to conquer Sri Lanka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->