எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட வேண்டும் - ஐநாவில் இந்திய நிரந்தர பிரதிநிதி
India condemns Pakistan to forsake cross border terrorism
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 8 மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா மாகாணங்களை கைப்பற்றி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 143 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 5 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்தன. மேலும் இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
இதைத் தொடர்ந்து ஐநா சபையில் உரையாடிய இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ், ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட்டால் தான் எங்களது குடிமக்கள் தங்கள் வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரை பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் முடிவு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனில் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் உயிரிழப்பு அதிகரிப்பதில் இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்றும், மனித உயிர்களை விலையாகக் கொண்டு எந்த தீர்வையும் எட்ட முடியாது என்று நாங்கள் தொடர்ந்து வாதிட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
India condemns Pakistan to forsake cross border terrorism