பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலிருந்து பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்தியாவும் சிங்கப்பூரும் மிக நெருக்கமான நட்புடன் இருந்து வரும் நிலையில் பகிரப்பட்ட நலன்கள், நெருக்கமான பொருளாதார உறவுகள் மற்றும் வலுவுடன் மக்கள் தொடர்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட  சிறப்பு உறவைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது என இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்வது குறித்த ஊடக கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்தியா கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. இதனால் தற்போது தடைசெய்யப்பட்ட வகையின் கீழ் உள்ள பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் தவறான வகைப்பாடு மற்றும் சட்டவிரோத ஏற்றுமதி தொடர்பான நம்பகமான கள அறிக்கைகள் அடிப்படையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி, பாஸ்மதி அரிசி மற்றும் பாஸ்மதி அரிசியின் எச்.எஸ் குறியீடுகளின் கீழ் ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஜூலை 20 முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India exempted from non basmati rice export ban to Singapore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->