பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி; எந்த நேரமும் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைக்கு வாய்ப்பு; அச்சத்தில் பாகிஸ்தான்..!
India may launch a surgical strike at any time Pakistan is in fear
ஜம்மு- காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்ற ஒற்றை புள்ளியில் மத்திய அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.
இந்நிலையில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையை எந்நேரத்திலும் இந்தியா மேற்கொள்ளக்கூடும் என்று பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது. இதன் காரணமாக அந்நாடு விமானப்படையை தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற பாகிஸ்தானும் உற்றுநோக்க ஆரம்பித்துள்ளது. இந்திய தரப்பில் நிச்சயம் பதிலடி உண்டு என்று உறுதியாக கூறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் தனது தரப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஆயத்தமாகி இருக்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட ஐஎஸ்ஐ இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. அதன் விளைவாக இந்தியாவின் தரப்பில் இருந்து எப்படியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் இருக்கலாம் என்பதால் அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளது. எல்லையோர கிராமங்களையும் காலி செய்துள்ளது. ராணுவத்தையும், ஐஎஸ்ஐ-யையும் உஷார் நிலையில் வைத்து இருக்கிறது.
அத்துடன், அசாதாரணமான நடமாட்டத்தை பாகிஸ்தான் கண்டறிந்துள்ளதாகவும், வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும், பாக்கிஸ்தான் அதற்கு அஞ்சுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
English Summary
India may launch a surgical strike at any time Pakistan is in fear