மத சுதந்திரத்தில் கவலைக்குரிய பட்டியலில் இந்தியா - சர்வதேச மத சுதந்திர ஆணையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் பொதுமக்கள் தங்களின் மத நம்பிக்கைகளை பின்பற்றுவதற்கு நாடுகள் சுதந்திரம் வழங்குகின்றனவா? இல்லை மதத்தை வைத்து, நாடுகள் மக்களை கொடுமைபடுத்துகின்றனவா? என்பதை கண்காணித்து வருகிறது. 

இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரை அறிக்கையின் படி, உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரத்தை பட்டியலிட்டு அமெரிக்கா வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் உலக நாடுகளின் மத சுதந்திரம் தொடர்பான பட்டியலை அமெரிக்கா வெளியிட்டது. 

அந்த பட்டியலில், மத சுதந்திரத்தில் மிகவும் கவலைக்குரிய நாடுகள் பட்டியலில் சீனா, பாகிஸ்தான் உள்பட சுமார் 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மிக கவலைக்குரிய பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியா இந்த முறை 'கவலைக்குரிய' நாடு என்று பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, இன்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமெரிக்க வெளியிட்ட மத சுதந்திர அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவள் பதில் தெரிவித்ததாவது, " இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அங்கு பல விதமான மத நம்பிக்கைகள் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். 

சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான எங்கள் ஆண்டு அறிக்கையில், இந்தியா குறித்து சில கவலைக்குரிய தகவல்களை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இதேபோல், இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரம் குறித்த சூழ்நிலையை நாங்கள் கவனமாக கண்காணிப்போம்' என்றுத் தெரிவித்தார்..
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india worry list in Religious Freedom america allounce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->