அமெரிக்காவில் லஞ்சம் வாங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் - 5 ஆண்டு சிறை.!
indian doctor arrested for bribery in america
அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சான்டியாகோ நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் எஸ். தண்ட்வாயா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் நரம்பியல் மருத்துவர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2010 ஆண்டு முதல் 2013 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்வதற்காக சுமார் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த லஞ்சப் பணத்தை அவர், மைக்கேல் ட்ரோபாட் என்ற நபருக்குச் சொந்தமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக மைக்கேல் ட்ரோபாட் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு பல்வேறு குற்ற வழக்குகள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு சுமார் 63 மாதங்கள் அதாவது ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரிடமிருந்து நரம்பியல் மருத்துவர் லோகேஷ் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், லோகேஷுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
English Summary
indian doctor arrested for bribery in america