இங்கிலாந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கையும் களவுமாக சிக்கிய இந்தியர்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கையும் களவுமாக சிக்கிய இந்தியர்.!

இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் முகன் சிங். இந்திய வம்சாவளியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு பர்மிங்காம் பகுதியில் இருந்து மேரிலெபோனுக்கு சென்ற ரெயிலில் ஏறி பயணம் செய்தார். 

இந்த ரெயில், பர்மிங்காம் மூர் ஸ்ட்ரீட் ரெயில் நிலையத்தில் நின்ற போது ரெயிலில் ஏறிய சுமார் இருபது வயது இளம்பெண் ஒருவர் முக்கண் சிங் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது, முகன் சிங் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் முகன் சிங்கை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள வார்விக் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு விசாரணையில் முகன் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு பதினாறு வாரம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு அவரது பெயரையும் சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian man arrested for harassment in england


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->