அமெரிக்கா அதிபர் தேர்தல்.! டிரம்பிற்கு எதிராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி.!
Indian origin Vivek Ramasamy against Trump in US election
அமெரிக்கா நாட்டில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து அதற்கான பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதுமட்டுமல்லாமல், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி என்பவரும் போட்டியிட உள்ளதாக விருப்ப மனு அளித்துள்ளார்.
அமெரிக்கா நாட்டில் உள்ள சின்சினாட்டியில் பிறந்த விவேக் ராமசாமி புகழ் பெற்ற ஹார்வர்ட், யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவர். இந்த நிலையில், ஒரு டி.வி. சேனலில் நேரடி நிகழ்ச்சியில் பேசிய விவேக் ராமசாமி, தான் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
முப்பத்தேழு வயதுடைய இவர் மிகப்பெரிய மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய, சொத்து மதிப்பு ரூ.4,140 கோடி என்று தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட இவருக்கு குடியரசு கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Indian origin Vivek Ramasamy against Trump in US election