நிக்கல் தொழிற்சாலையில் வெடிவிபத்து - உயிரிழந்த சீன ஊழியர்கள்!
Indonesia nickel manufacturing blast 13 workers killed
இந்தோனேசியாவில் மின்சார வாகன பேட்டரி உற்பத்தியில் முக்கிய மூலப் பொருளாக உள்ள நிக்கல் கனிம உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகிறது.
இந்தோனேசியா, சுலவிசி தீவில் சீன நிறுவனத்தின் நிதி உதவியால் நிக்கல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டதில் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 13 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
மேலும் 38 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 ஊழியர்கள் சீனாவை சேர்ந்தவர்கள் எனபது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பான விசாரணையில் தொழிற்சாலையில் வழக்கமான பழுது நீக்கும் பணியின் போது இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
Indonesia nickel manufacturing blast 13 workers killed