இந்தோனேசியா வடக்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 5.9 ரிக்டர் பதிவு.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா, வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் கடற்கரையில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.01 மணியளவில் தலாக் தீவுகளின் வடமேற்கு பகுதியில் 41 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia north Sulawesi earthquake


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->