அப்புறம் தம்பி, எப்ப கல்யாணம்? கேள்வி கேட்ட பெருசை கட்டையால் அடித்து கொலை செய்த 45 வயது இளைஞர்!
Indonesia Single to Marriage issue
அப்புறம் தம்பி, எப்ப கல்யாணம்? என்று திருமணமாகாத இளைஞர்களை, அவர்களின் உறவினர்கள் கேட்பது வழக்கம் தான்.
தற்போதைய காலகட்டத்தில் மணப்பெண் கிடைக்காமல் இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தவிர்த்து வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் உள்ளது. ஊரில் உள்ள சில பெரியவர்கள், வேண்டும் என்றே, இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறாத வகையில், இட்டுக்கட்டி பேசி திருமணத்திற்கு தடை போட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
குறிப்பாக திருமணமாகாத இளைஞரின் பக்கத்து வீட்டில் உள்ளவர் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ஒரு குற்றத்தாட்டும் எழுந்து வருகிறது.
தமிழகத்தில் கூட திருமணமாகாத இளைஞர்கள், தங்களுக்கு வருகின்ற திருமண வாய்ப்பை தட்டிப் பறிக்கும் பெரியவர்களை எச்சரித்து கட்அவுட் வைத்த சம்பவங்கள் ஏராளம்.
இந்த நிலையில், எப்போ கல்யாணம் என்று பக்கத்து வீட்டு முதியவர் அடிக்கடி கேட்டு வந்ததால், ஒரு 45 வயது கல்யாணம் ஆகாத இளைஞர் ஒருவர் அடித்தே கொலை செய்த சம்பவம் இந்தோனேசியா நாட்டில் அரங்கேறி உள்ளது.
இந்தோனேஷியா வடக்கு சுமத்ரா பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் அசிம் இரியான்டோ. இவரின் பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது திருமணம் ஆகாத இளைஞர் சிரேகர்.
முதியவர் அசிம் அடிக்கடி சிரேகரை பார்த்து, எப்போ திருமணம் செய்து கொள்ளபோகிறாய்? வயது வேறே உயர்ந்ந்து கொண்டே செல்கிறது. ஏன் இன்னும் சிங்கிளாக இருக்கிறாய்? என்று கேட்டு கொண்டே இருந்துள்ளார்.
முதியவரின் அடுக்கனுக்கான கேள்விகளால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர், கடந்த ஜூலை 29 ஆம் தேதி முதியவர் அசிம் வீட்டு கதவை அடித்து உடைத்து உள்ளே புகுந்து அசிமை மரக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அசிம், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் சிரேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Indonesia Single to Marriage issue