இந்தோனேசியாவில் திடீரென அதிர்ந்த வீடுகள்... சாலையில் தஞ்சமடைந்த மக்கள்!
Indonesia suddenly earthquake
இந்தோனேசியா, கிழக்கு பப்புவா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 7:11 மணியளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. மேற்கு பப்புவா மாகாணத்தில் பூமிக்கு அடியில் சுமார் 78 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறித்தும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவின் தெற்கு சுமந்த்ரா தீவில் கடந்த 5 ஆம் தேதி 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indonesia suddenly earthquake