உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை - குவியும் புகார்கள்.!!
instagram users complaint for network shutdown
உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை - குவியும் புகார்கள்.!!
பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இந்த ஆப்பை உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், உலகளவில் இன்ஸ்டாகிராம் சேவை இன்று அதிகாலை 3.15 மணி முதல் முடங்கியுள்ளது.
இது தொடர்பாக, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் இன்ஸ்டகிராம் சேவை முடங்கியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இவர்களின் சரியான எண்ணிக்கையை இடையூறுகளால் வெளியிடவில்லை.
இருப்பினும், இது தொடர்பாக செயலிழப்பு கண்காணிப்பு இணையதளத்தில் அமெரிக்காவில் 100,000 பயனர்களும், கனடாவில் 24,000க்கும் அதிகமான பயனர்களும், பிரிட்டனில் 56,000 பேர் என்று மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, "இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பை முடிந்தவரை மிக விரைவாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
instagram users complaint for network shutdown