உன்னை பற்றி சொல்... உன் நண்பனை பற்றி சொல்கிறேன்.! இன்று சர்வதேச நண்பர்கள்.!!
International Friendship Day 2022
சர்வதேச நண்பர்கள் தினம் :
'உன்னை பற்றி சொல்... உன் நண்பனை பற்றி சொல்கிறேன்" என்பது பழமொழியாக இருந்தாலும்... அது எந்த காலத்திற்கும் பொருந்தும். இளைஞர்களே நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள். அவர்களை நட்பின் மூலம் இணைப்பதால் உலகளவில் சமாதானம், அமைதி நிலைபெறும் என்பதற்காக ஐ.நா.சபை 2011ஆம் ஆண்டு சர்வதேச நண்பர்கள் தினத்தை அறிவித்தது.
இத்தினம் ஆண்டுதோறும் ஜூலை 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா உட்பட சில நாடுகளில் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் :
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன.
இதனைத் தடுத்திட ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை கடைபிடிக்குமாறு அறிவித்தது.
English Summary
International Friendship Day 2022