சீனாவின் முயற்சி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு உறவை புதுப்பிக்கும் ஈரான்-சவுதி அரேபியா - Seithipunal
Seithipunal


கடந்த 2016ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில், ஷியா மதகுரு ஷேக் நிம்ர் அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஷியா பிரிவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஷியா ஆதிக்க நாடான ஈரானும் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், சவுதி அரேபியாவுடனான உறவை முற்றிலும் முறித்துக் கொண்டது.

இந்நிலையில் ஏழு ஆண்டுக்கு பிறகு சீனாவின் சமரச முயற்சியால் ஈரானும், சவுதி அரேபியாவும் தங்களது தூதரக உறவை புதுப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தூதரக பேச்சு வார்த்தைகளின் மூலம் ஈரானுடான அலுவலகங்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள முடியும் என சவுதி அரேபியா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இரு நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும்பொழுது மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் பதற்றம் தணிக்கப்படும் என்றும், இரண்டு மாதங்களுக்குள் இரண்டு நாடுகளின் தூதரகங்கள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran and Saudi Arabia renew its relations after 7 years


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->