ஈரான் பந்தர் அப்பாஸ் துறைமுக வெடி விபத்து...! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு...! - Seithipunal
Seithipunal


ஈரான் நாட்டின் மிகவும் பரபரப்பு மிகுந்த துறைமுகமான 'பந்தர் அப்பாஸ்', பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த மிகப்பெரிய துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும்.

மேலும், எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் அப்பகுதி முழுதும் சேதமடைந்து, போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேலும் பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வெடிவிபத்து குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran Bandar Abbas port explosion Death toll rises to 70


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->