ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கவும் இல்லை, வழங்க போவதுமில்லை - ஈரான் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் படைகள், ரஷ்ய மற்றும் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாடத்தின் மீது குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தியது.

இதைத்தொடர்ந்து ரஷ்யா படைகள் 40-க்கும் மேற்பட்ட உக்ரைன் நகரங்களில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மேலும் கருங்கடல் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தின் மீது ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை ஈரான் வழங்கி வருவதாகவும், அதன் மூலம் ரஷ்யா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை ஈரான் முற்றிலும் மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் உக்ரைனில் பயன்படுத்த எந்த ஆயுதத்தையும் வழங்கவில்லை மற்றும் வழங்கவும் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் சமீபத்திய வாரங்களில் உக்ரைன் மீதான தாக்குதல்களில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், திங்கள்கிழமை லக்சம்பர்க்கில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர்களால் இது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran has not and will not supply arms to Russia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->