ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியது உண்மை! - Seithipunal
Seithipunal


ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது கடந்த 9 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெடிகுண்டு ட்ரோன்கள் மூலம் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா அதிகப்படியான தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனின் முக்கிய மின்நிலையங்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யா பயன்படுத்தி வரும் ட்ரோன்கள் ஈரானால் வழங்கப்பட்டவை என மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் ரஷ்யாவுக்கு தொடர்ந்து ட்ரோன்களை வழங்கி வருவதாகவும், இதற்கான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ஈரான் தரப்பிலிருந்து இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை ஈரான் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் "ரஷ்யாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான ட்ரோன்களை வழங்கினோம். ஆனால் அவை உக்ரைன் போருக்கு சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. ரஷ்யா உக்ரைன் மீது ஈரான் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதற்கான ஆவணங்கள் ஏதேனும் உக்ரைனிடம் இருந்தால் எங்களிடம் வழங்க வேண்டும். ஈரான் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் நாங்கள் அலட்சியமாக இருக்க மாட்டோம்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran supplied drones to Russia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->