ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு.! ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இஸ்லாமிய சிறுபான்மையின ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் முக்கிய சாலை பகுதியில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் நபிகள் நாயகத்தின் பேரனாக கருதப்படும் ஹுசைனின் தியாகத்தின் நினைவாக கொண்டாடப்படும் அஷுரா விழாவை அனுசரிக்கும் இடத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய சிறுபான்மையின பிரிவுகள் மற்றும் பிற மத சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IS takes responsible for Kabul bomb blast


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->