அமெரிக்காவின் உதவியால் ஈராக் படையினர் அதிரடி தாக்குதல்: பலியான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தளபதி...!
ISIS leader Abu Khadija killed by Iraqi forces and US led coalition
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளைஎடுத்து வருகிறார். அதில் உலக அளவில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதன் காரணமமாக பயங்கரவாத அமைப்புகள் மீதான தாக்குதல்களை அமெரிக்க படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, சிரியா, சோமாலியா போன்ற நாடுகளில் பயங்கரவாத அமைப்பினரை குறி வைத்து அமெரிக்க படையினர் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க படையினரினின் உதவியுடன், ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து அந்நாட்டு படையினர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அப்துல் மகி மசூலா அல் ரிபாய் கொல்லப்பட்ட்டுள்ளதாக ஈராக் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அப்துல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஈராக் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
ISIS leader Abu Khadija killed by Iraqi forces and US led coalition