ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!... 34 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையிடையே யாரும் எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்பட்டது. 

மேலும் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகளும் பல்வேறு இடங்களில் வெடித்து சிதறியதில், இதுவரை 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்  ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். 

தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றச்சாட்டு எழும் சூழலில், லெபனானின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் இந்த வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel airstrike targeting Hezbollah 34 people were killed in a shocking incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->