ரஃபாவை கைப்பற்றிய இஸ்ரேல் படை.!! உச்சகட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது காசாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த கமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. கடந்த ஏழு மாதங்களாக நீடித்து வரும் இந்த போரால் சுமார் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு முன் வந்ததால் உலக நாடுகள் நிம்மதி அடைந்த நிலையில் தற்போது இஸ்ரேலியப் படைகள் எகிப்துடனான ரஃபாவின் காசா பகுதியை கைப்பற்றி இருப்பது மத்திய கிழக்கு நாடுகளை பதற்றம் அடையச் செய்துள்ளது.

பாலஸ்தீன எல்லைப் பகுதியை இஸ்ரேல் படைகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து தற்போது எகிப்து எல்லையான ரஃபா எல்லையையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றி உளளதால் அவ்வழியாக காஸாவுக்கான உதவி பொருட்கள் எடுத்து செல்லப்படுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

காசாவின் ரஃபா பகுதிக்கு செல்லக்கூடிய எல்லைப் பகுதிகளின் ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட தரைவழி தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் குவித்து வருகிறது.

 

கடந்தாண்டு தொடங்கி 7 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் காஸா இஸ்ரேல் போரை தற்காலிகமாவது நிறுத்த பல நாடுகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இஸ்ரேல் நடத்தப் போகும் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும் என யூனிசெப் உள்ளிட்ட அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது இஸ்ரேல் ராணுவம் ஆயுதங்களை குவித்து வருவது உலக நாடுகள் மத்தியில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel army captured rafah area in Gaza


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->