இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: அமெரிக்காவில் 300 பேர் கைது! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெறும் போர் காரணமாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதேபோல் ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. பல்வேறு நாடுகளில் இந்த தாக்குதல்களை நிறுத்தக் கோரி போராட்டம் நடந்து வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்க தலைநகரம் வாஷிங்டனில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெறும் போரை நிறுத்தக் கோரி பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். 

மேலும் அங்குள்ள கேனான் ரோட்குண்டா பகுதியை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பி பேரணியாக அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தை நோக்கி சென்றனர். 

இதனை தொடர்ந்து பாராளுமன்ற நுழைவு வாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தி நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பாதைக்கு பதிலாக சுரங்க பாதைகளை பயன்படுத்துமாறு பாராளுமன்ற ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து களைந்து போக அறிவுறுத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டதால் போலீசார் சுமார் 300 பேரை கைது செய்தனர். 

இந்த போராட்டத்தில் யூத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு, போர் நிறுத்தம் கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர். 

யூத அமைப்பு உறுப்பினர்கள் காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர். இவர்கள் பாராளுமன்ற கோனேன் கட்டிடத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

அதிபர் ஜோபைடன், காசாவில் போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க பாராளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர். 

போராட்டக்காரர்கள் அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel Hamas war 300 people arrested in US


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->