இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட 'எக்ஸ்' நிறுவனத்தின் தலைவர்!
Israel Hamas war head of X company announcement donate
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 200க்கும் மேற்பட்டோரை பிணை கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் 5 நிமிடத்திற்குள் 5000 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் ஹமாசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்ய கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் காசாவின் வடக்கு பகுதி நிலைகுலைந்து.
மேலும் முக்கிய மருத்துவமனைகள், எரிபொருள் தட்டுப்பாட்டால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளும் ஹமாஸ் தாக்குதலில் செய்தமடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து உலக கோடீஸ்வரரும் எக்ஸ் நிறுவனத்தில் தலைவருமான எலன் மாஸ்க், வலைதளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீர் அமைப்பதற்காகவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Israel Hamas war head of X company announcement donate