இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 500 பேர் பலி - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி பலர் பிணை கைதிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது ஏவுகணைகளை வீசி வருகிறது. 

இதனால் இருபுறமும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. 11வது நாளாக நேற்று நடந்த தாக்குதலில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 4000 கடந்துள்ளது. 

இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக அங்கிருந்த மக்கள் தெற்கு பகுதிக்கு இடம்பெயரும் படி அறிவுறுத்தியது. 

அதன் பெயரில் லட்சக்கணக்கான மக்கள் தெற்கு காசாவில் அடைக்கலம் புகுந்தனர். இந்நிலையில் தெற்கு காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசினர். 

தெற்கு காசா நகரங்களான ரபா மற்றும் கான் யூனிசில் ஆகிய பகுதிகளில் சரமாரியாக குண்டு வீசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் அங்கிருந்த மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் ரபா பகுதியில் 27 பேரும், கான் யூனிசில் பகுதியில் 30 பேரும் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel Hamas war Israel planned attack 500 people died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->