பத்திரிகையாளர்கள் உயிரை பறித்த போர்: இஸ்ரேல் செய்தி நிறுவனம் அதிர்ச்சி தகவல்!
Israel Hamas war Journalists died
இஸ்ரேல் தாக்குதலின் மூலம் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்புக்குழு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் போர் தொடங்கி 3 வாரங்களாக நீடித்து வரும் நிலையில் காசா எல்லைக்குள் இஸ்ரேல் படையினர் தரை வழியாக நுழைந்துள்ளனர்.
வான் வழி, கடல் வழி போன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்த தாக்குதலை போரின் இரண்டாம் கட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 25 நாட்களாக இஸ்ரேல் பயங்கரவாதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 210 பேர் பிணை கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போர் குறித்த விவரங்களை சேகரிக்க பல்வேறு நாட்டினர் தரப்பில் இருந்து பத்திரிகையாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுவரை தகவல் சேகரிப்பதற்காக சென்ற பத்திரிக்கையாளர்களின் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 26 பேர் பாலஸ்தீனர்கள் மற்றும் 4 பேர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் 8 பத்திரிகையாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 9 பேர் காணாமல் போனதாகவும் இஸ்ரேல் செய்தியாளர்கள் பாதுகாப்பு குழு தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Israel Hamas war Journalists died