இஸ்ரேல் ராணுவம் காசாவில் 3 நாள் போரை நிறுத்த ஒப்புதல்! - Seithipunal
Seithipunal


காசா முனை ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளுரையுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே, நீடித்து வரும் இந்த மோதலில் இது வரை குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர். 

உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தாலும் இஸ்ரேல் அதை கண்டு கொள்ளவில்லை. இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சுகாதார வசதிகள் இல்லாதததால் காலரா உள்ளிட்ட நோய் பரவும் அபாயமும் அங்கு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, முதல் கட்டமாக மத்திய காசாவில் முகாம்களில் தங்கி இருக்கும் 10 வயதுக்கு உட்பட்ட சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் மனிதாபிமான அடிப்படையில் மூன்று நாட்கள் தற்காலிகமாக காசாவில் சில பகுதிகளில் போரை நிறுத்த  ஒப்புதல் அளித்துள்ளது. நாளை முதல் மூன்று நாட்கள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், தேவைப்பட்டால் இஸ்ரேல் கூடுதல் நாளை ஒதுக்கவும்  முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israeli army agrees to cease 3-day war in Gaza


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->