ஸ்பேஸ் X ராக்கெட் மூலம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ !! - Seithipunal
Seithipunal


அமெரிக்க தொழிலதிபர் டெஸ்லா கார் நிறுவன தலைவர் எலோன் மஸ்க்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் X  நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி துறையான இஸ்ரோ தனது ஜிசாட் 20 என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோளை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக விண்ணில் செலுத்தவுள்ளது. 

ஜிசாட் 20 செயற்கைக்கோள் தயார் நிலையில் உள்ளது எனவும், இது அமெரிக்காவிற்கு அனுப்பப்படும். இந்த செயற்கைக்கோள் ஆகஸ்ட் நடுப்பகுதியில் பால்கன் 9 ராக்கெட்டைப் பயன்படுத்தி விண்வெளிக்கு அனுப்பப்படும். பால்கன் 9 ராக்கெட்டின் நீளம் 70 மீட்டர். இது இரண்டு நிலை ராக்கெட் ஆகும். இது இதுவரை 358 முறை ஏவப்பட்டுள்ளது. அதனால் அதன் வெற்றி விகிதம் அதிகம் என டெல்லியில் நடைபெற்ற இந்திய விண்வெளி கூட்டத்தில்  இந்த அறிவிப்பை வெளியிட்டார் இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத்.

செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன் இந்தியாவின் விண்வெளி நிறுவனமான  இஸ்ரோவிடம் உள்ளது. பல நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இஸ்ரோவின் உதவியைப் பெறுகின்றன, ஆனால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன் , ​​இஸ்ரோவிடம் இல்லை.

அதானால் இதற்க்கு முன்னதாக இஸ்ரோ இந்த பணிக்கு பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான ஏரியன்னை நம்பியிருந்தது. மேலும் இந்த செயற்கைகோளின் திறனை பற்றி பார்க்கும் போது, இந்த GSAT 20 ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள். பூமியில் தகவல் தொடர்பு வசதிகளை வழங்குவதே இதன் வேலை. இந்த செயற்கைகோளின் எடை 4,700 கிலோ ஆகும். இதன் உயர் செயல்திறன் திறன் 48 ஜிபிபிஎஸ் ஆக இருக்கும். 

மேலும் இந்த செயற்கைகோள் 32 புள்ளிக் கற்றைகளைக் கொண்டுள்ளது. மேலும் இது வடகிழக்கு இந்தியாவிலிருந்து அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் வரை தனது இணைப்பை வழங்கும். இந்த செயற்கைக்கோள் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இஸ்ரோவின் வணிகம் தொடர்பான பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

GSAT-20 என்பது கா-பேண்ட் உயர் செயல்திறன் தகவல் தொடர்பு செயற்கைக்கோள். இதன் பயன்பாடு இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைகள் மற்றும் இன்-ஃப்ளைட் இணைப்பை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இதை விண்ணில் செலுத்தினால் இது தொடந்து 14 ஆண்டுகள் வரை  செயல்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO to launch satellite with SpaceX rocket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->