நியூசிலாந்து : பிரதமர் பதவியிலிருந்து விலகும் ஜசிந்தா ஆர்டெர்ன்.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து நாட்டின் பிரதமராக தாராளவாத தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜசிந்தா ஆர்டெர்ன் உள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். 

இந்த நிலையில், நியூசிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை விட தாராளவாத தொழிலாளர் கட்சியை மிகவும் பின் தங்கியது. இதனால், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். 

அதன் படி, அவர் வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதியுடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஜசிந்தா ஆர்டர்ன் தெரிவித்ததாவது, 

"இது கடினமான பணி என்பதால் நான் விலகி செல்லவில்லை. அப்படி இருந்திருந்தால் பதவி ஏற்ற இரண்டே மாதங்களிலேயே விலகி சென்றிருப்பேன். நாட்டை வழிநடத்துவதற்கு சிறந்த நபர் இருப்பதை அறிந்ததால் தான் நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jacinda Ardern step down in newzealand prime minister posting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->