இளைஞர்களே உஷார்.. இனி மறந்தும் கூட இதய எமோஜிய அனுப்பிடாதிங்க.!
jail prison to peoples for send heart emoji in savudi arebia
இளைஞர்களே உஷார்.. இனி மறந்தும் கூட இதய எமோஜிய அனுப்பிடாதிங்க.!
ஒருவருடன் இணைய வழியில் உரையாடல் செய்யும் போது நீண்ட வரிகளில் தகவல்களை எழுதுவதற்கு பதிலாக எமோஜிகளை அனுப்புகின்றனர். இந்த எமோஜிகள் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் இந்த எமோஜிகள் வரவேற்பும் பெற்று வருகின்றன.
இது ஒருபுறம் நல்லது செய்தாலும், சிலருக்கு சிக்கல்களை தருகிறது. தெரியாத நபருக்கு எமோஜிகளை அனுப்புவதும், தவறான நோக்கத்தில் அனுப்புவதும் பெரும் சிக்கல்களில் முடிகிறது. இவற்றைத் தவிர்க்க எமோஜிகளை பதிவிடுவதில் சுய கட்டுப்பாடுகள் அவசியமாகிறது.
அதன் படி, சில நாடுகள் எமோஜிகளை பிரயேகிப்பதில் சட்டப்படியான கட்டுப்பாடுகளை அமல்படுத்த தொடங்கி உள்ளன. இந்த நிலையில், சவுதி அரேபியாவில் இதய எமோஜிகளை பெற்ற பெண்கள் அது தொடர்பாக புகார் அளித்தால், எமோஜி அனுப்பியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முதல் முறை தவறு செய்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம், மீண்டும் அதே தவறைச் செய்பவர்களுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் கூடுதல் அபராதமும் விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக, குவைத் நாட்டில் வாட்ஸ் ஆப் மற்றும் இதர சமூக ஊடகங்களில் இதய எமோஜிகளை சிறுமிகளுக்கு அனுப்புவது குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
jail prison to peoples for send heart emoji in savudi arebia