ஜனவரி ஒன்று முதல்... மருந்தகங்களில் இலவச காண்டம் - பிரான்ஸ் அதிபர் தகவல்.!
janauary first free condom in medical shop franz govt allounce
ஒவ்வொரு நாட்டிலும் பொதுமக்களுக்கு இலவச கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மற்றும் அடிப்படையான விசயங்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் அரசு வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பிரான்சில் உள்ள மக்களில் 25 வயதுடைய அனைவருக்கும் இலவச காண்டம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்ததாவது, "நாட்டில் உள்ளவர்களில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மருந்தகங்களில் இருந்து இலவச காண்டங்களை பெற்று கொள்ளலாம்.
இந்த நடைமுறை அடுத்த ஆண்டிலிருந்து அதாவது, ஜனவரி 1-ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும்" என்றுத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவருடைய இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக் குறித்து சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனால், மக்கள் எதிர்ப்பை கருதி, இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது என்று அதிபர் தெரிவித்துள்ளார். அதன்படி, 25 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து நபர்களுக்கும் இனி இலவசமாக காண்டம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அதிபர் மேக்ரான் தெரிவித்ததாவது, "பாலியல் உறவில் மைனர் வயதில் உள்ளவர்களும் நிறைய பேர் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவு" என்று தெரிவித்துள்ளார். இதனால் பிரான்சில் உள்ள மருந்து கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது என்று கூறப்படுகிறது.
English Summary
janauary first free condom in medical shop franz govt allounce