மூன்று நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 22ம் தேதி தைவான் செல்லும் ஜப்பான் அரசியல்வாதிகள் - Seithipunal
Seithipunal


தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக சீனா நினைத்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி மற்றும் 5 எம்.பி.க்களை கொண்ட குழு தைவான் அதிபரை சந்தித்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தைவான் எல்லை பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக போர் பயிற்சியில் ஈடுபட்டது.

இந்நிலையில் வரும் 22ஆம் தேதி ஜப்பானின் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்த புருயா கெய்ஜி மற்றும் கிஹாரு மினோரு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தைவான் செல்ல உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவுடன் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்துவது பற்றியும், சீனா மேற்கொண்ட ராணுவ பயிற்சி பற்றியும் தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் விவாதிக்க உள்ளனர்.

மேலும் தைவான் துணை அதிபர் லாய் சிங்-தே, பிரதமர் சூ செங்-சாங், சபாநாயகர் யூ சி-குன் ஐயோ ஆகியோரை ஜப்பான் தலைவர்கள் சந்தித்து தைவான் மற்றும் சீனா இடையேயான பதற்ற நிலை தொடர்பாக பேச உள்ளனர்.

இதன் பின்னர் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ, தைவான்-ஜப்பான் உறவுகளுக்கான கூட்டமைப்பு தலைவர் சூ ஜியா-சியுவான் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan politician 3 day visit to Taiwan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->