வடகொரியாவின் ஏவுகணை சோதனை சர்வதேச அமைதியை சீர்குலைக்கிறது - ஜப்பான்
Japan says North Korea missile test disrupts international peace
ஐநா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் வடகொரியா இன்று காலை மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை செய்துள்ளது. இந்த மூன்று ஏவுகணைகளும், ஜப்பானின் பொருளாதார மண்டலத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில் விழுந்ததாகவும், இந்த ஏவுகணைகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஜப்பான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த சோதனையை அடுத்து ஜப்பானின் போர் விமானங்கள் மற்றும் கடற்படை எச்சரிக்கையாகவும், தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணைகள் சர்வதேச அமைதியை சீர்குலைப்பதாகவும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாகவும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
English Summary
Japan says North Korea missile test disrupts international peace