தைவான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் சீனா அதிபரை சந்திக்க உள்ள ஜோ பைடன்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் வருகின்ற 14ந்தேதி ஜி20 உச்சிமாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சந்திப்பில் இரு தலைவர்கள் இடையே தகவல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளிடையேயான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்துள்ளார்.

மேலும் தைவானில் நிலவும் போர் பதற்றங்கள் மத்தியில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe biden meet China president amid war tension in Taiwan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->