மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா ஒருபோதும் விலகி செல்லாது - அதிபர் ஜோ பைடன்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பின்பு முதல் முறையாக கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தின் முதல் நாடாக கடந்த 6ஆம் தேதி இஸ்ரேல் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன் மூன்று நாட்கள் இஸ்ரேல் பயணத்தை முடித்த பின்பு சவுதி அரேபியா சென்றார்.

அங்கு அதிபர் ஜோ பைடன் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அதன் பின்னர் சவுதி அரேபியாவின் ஜூடா நகரில் கிழக்கு நாடுகளின் அதிபர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், ஈராக் பிரதமர் முஸ்தபா அல் ஹதீமி, குவைத் அரசர் ஷேக் தமீம் பின் அகமது அல் தானி, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் மார்ஷல் அல் அகமது அல் ஜபீர் அல் ஷபா, எகிப்து அதிபர் அப்தில் ஃபிடா எல் சிசி, ஜோர்டான் இளவரசர் அப்துல்லா, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பக்ரைன் அரசர் ஹமிது பின் அஸ்லாம் கலிபா, , ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நுகன், ஓமன் துணை பிரதமர் அசாத் பின் தரிக்யு பின் தைமூர் அல் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் முடிவில் மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கா ஒரு போதும் விலகி செல்லாது. மத்திய கிழக்கில் வெற்றிடத்தை உருக்கவும்.

அந்த வெற்றிடத்தை சீனா, ரஷியா, ஈரான் நாடுகள் நிரப்பவும் அமெரிக்கா விடாது என்று செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe biden says America will never walk away from the Middle East


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->