எஃப்-16 ரக போா் விமானங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படாது - அமெரிக்க அதிபர் திட்டவட்டம் - Seithipunal
Seithipunal


உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. போரின் தொடங்கியதிலிருந்தே ரஷ்ய தாக்குதலை சமாளிக்க மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் அதிகரித்து வருவதால் மேற்கத்திய நாடுகளிடம் அதிநவீன பீரங்கிகளை வழங்குமாறு உக்ரைன் கோரிக்கை விடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து ஜெர்மனி ரஷ்யாவின் எதிர்வினை தாக்குதலை கருத்தில் கொண்டு பீரங்கிகளை வழங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தன. இருப்பினும் அமெரிக்கா எம்1 அப்ரம்ஸ் ரக பீரங்கிகளை வழங்க முடிவு செய்தபின், ஜெர்மனியும் லெப்பா்ட்-2 பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்தன.

மேலும் உக்ரைன், மேற்கத்திய நாடுகளிடம் அதிநவீன போர் விமானங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தது. குறிப்பாக அமெரிக்காவின் எஃப்-16 ரக போா் விமானங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கா அதிபர் ஜோ பைடனிடம், உக்ரைனுக்கு அதிநவீன எஃப்-16 ரக போா் விமானங்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எஃப்-16 ரக போா் விமானங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe biden says F16 fighter jets will not be sent to Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->