ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான நபர் பிறந்ததினம் இன்று.!!
johannes kepler birthday 2021
கெப்ளர் :
ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான ஜோகன்னஸ் கெப்ளர் 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் பிறந்தார்.
இவர் வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் 'மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்" என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இந்நூல் 1596ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு, திறன்வாய்ந்த வானியலாளராக அங்கீகாரம் பெற்றார்.
இவர் 'அஸ்ட்ரோநோமியா நோவா", 'ஹார்மோனிஸ் முன்டி" ஆகிய நூல்களில் கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக கூறிய கருத்துக்கள் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றன.
கோள்களின் இயக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 3 விதிகளைக் கண்டறிந்தார். கண்களால் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதற்கு சரியான விளக்கம் தந்து, இவர் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கான கண்ணாடிகளை கண்டறிந்தார். 'எபிடோமி அஸ்ட்ரோநோமியா" என்ற புகழ்பெற்ற நூலை 1621ஆம் ஆண்டு வெளியிட்டார்.
இவர்தான் முதன்முதலில் 'சாட்டிலைட்" என்ற வார்த்தையை உருவாக்கினார். பன்முகப் பரிமாணம் கொண்ட ஜோகன்னஸ் கெப்ளர் 1630ஆம் ஆண்டு மறைந்தார். கோள்களைக் கண்டறியும் நாசாவின் தொலைநோக்கிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
English Summary
johannes kepler birthday 2021