தலைசிறந்த எழுத்தாளரான ஜோஹன்னஸ் ஜென்சன் பிறந்தநாள்.!! - Seithipunal
Seithipunal


ஜோஹன்னஸ் ஜென்சன் :

தலைசிறந்த எழுத்தாளரான ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் 1873ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி டென்மார்க்கின் ஃபார்சோ நகர் அருகே உள்ள ஹிம்மர்லேண்ட் கிராமத்தில் பிறந்தார்.

பல அறிவியல் துறைகளை உள்ளடக்கிய மருத்துவ படிப்பு படிக்கும்போது, இவருக்கு படைப்புக் களத்தில் ஆர்வம் அதிகமானதால் இறுதியில், எழுத்தாளராக வேண்டும் என தீர்மானித்தார்.

1898ஆம் ஆண்டு முதல் 1910ஆம் ஆண்டு வரை வெளிவந்த 'ஹிம்மர்லேண்ட் ஸ்டோரிஸ்" என்ற கதைத்தொடர் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இவர் எழுதிய கொன்ஜென்ஸ் ஃபால்ட் என்ற வரலாற்று நாவல் டென்மார்க்கின் குறிப்பிடத்தக்க வரலாற்று நாவல் என்று போற்றப்படுகிறது.

பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான கோட்பாடுகளின் அடிப்படையில் 'டென் லாங்கெ ரெஜ்சி" என்ற தலைப்பில் 6 நூல்களை எழுதியுள்ளார். 

1944ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றார். கவிதைக் களத்தில் சிறப்பாக பங்காற்றிய ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் 1950ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Johannes v Jensen birthday 2022


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->