குடும்பத்துடன் கடத்தப்பட்ட செய்தியாளர் - மெக்ஸிக்கோவை மிரள வைக்கும் கடத்தல் கும்பல்.!
journalist kidnape in mexico
கொலம்பியாவிலிருந்து மெக்சிகோவிற்கு வந்த கடத்தல் கும்பல்கள், தற்போது மெக்சிகோவின் தெற்கு பகுதியில் நாட்டிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருகின்றன. அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மெக்சிகோவில் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தங்களுக்கு எதிராக செய்தி வெளியிடும் செய்தியாளர்களைக் கடத்திச் சென்று அவர்களை சித்ரவதை அல்லது கொலை செய்து விடுவது உள்ளிட்ட அட்டூழியங்களில் இந்த கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சம்பவத்தைத் தடுக்க, பலமுறை செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை, ஐந்து ஆண்டுகளில் சுமார் 54 செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கடத்திச் செல்லப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டு பின்னர் படுகாயங்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் மூன்று செய்தியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட மொத்தம் ஐந்து பேரை போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடத்திச் சென்றுள்ளது.
அதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் இருந்த செய்தியாளர் டொலேடோ, அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட மூன்று பேரை துப்பாக்கி ஏந்திய நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
இதுவரைக்கும் இவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியாத நிலையில், மெக்சிகோ போலீஸாரும் ராணுவமும் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும் என்று சக செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்களால், பொதுமக்களிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
English Summary
journalist kidnape in mexico